இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் இந்தியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 336 ஓட்டங்களை பெற்றுள்ளது. யஷாஸ்வி ஜய்ஷ்வால் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 179 ஓட்டங்கள் மூலம் இந்தியா அணி தப்பித்துள்ளது. ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் எவரும் அரைச்சதத்தை கூட தொடவில்லை. சுப்மன் கில் 34 ஓட்டங்களையும், ராஜாத் படித்தர் 32 ஓட்டங்களையும் பெற்றனர். அஷ்வின் ஆட்டமிழ்க்காமல் 5 ஓட்டங்களுடன் காணப்படுகின்றார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சொஹைப் பஷீர், ரெஹான் அஹமட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.
இரண்டு அணிகளுக்குமான ஐந்து போட்டிகளடங்கிய தொடரில் முதற் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் காணப்படுகிறது.