குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமாருமான கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மாளிகாகந்த நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.