இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக மிக்கி ஆர்தர் அறிவித்துள்ளாலர்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு தனது பதவியிலிருந்து விலகுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இப்பதவி விலகலின் பின்னர் டெர்பிஷயர் பிராந்திய கிரிக்கெட் கழகத்துடன் 3 வருட ஒப்பந்தத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றவுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், தனது பதவி விலகலை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் செயலாளர் மொஹான் டி சில்வா ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
