ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் – ஒருவர் கைது

ஈஸ்டர் தாக்குதலோடு தொடர்புடைய பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாசிமின் உதவியாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவர் காத்தான்குடி பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடியைச் சேர்ந்த 37 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஸஹ்ரானின் உதவியாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளை தொலைபேசி வழியாக பேணி வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் - ஒருவர் கைது

Social Share

Leave a Reply