ஓய்வு பெறும் வயதெல்லை குறித்த சட்ட மூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (17/11) கையொப்பமிட்டுள்ளார்.
தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக உயர்த்தும் சட்ட மூலம் அண்மையில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
இதுவரை காலமும் தனியார் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை தொடர்பில் ஓர் நிச்சயமான வரையறை இருக்கவில்லை.
அதற்கமைய கடந்த 11ஆம் திகதியன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஓய்வு பெறும் வயதெல்லை குறித்த சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வருகின்றது.
இதன்படி, 2021ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியச் சட்டம் மற்றும் 2021ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க பணிநீக்க சட்டங்கள் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளன.