இரண்டு வருடங்கள் பூர்த்தி

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் 2 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ 52.25 சதவீத வாக்குகளில் முன்னிலை வகித்து ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து நவம்பர் 18ஆம் திகதியன்று அநுராதபுரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ருவன்வெலிசாயவில் வைத்து அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டு இலங்கையின் நிறைவேற்று அதிகாரிமிக்க 7ஆவது குடியரசு தலைவராக அவர் பதவியேற்றார்.

இதேவேளை, அநுராதபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சந்தஹிருசேய சைத்தியத்தை மகா சங்கத்தினருக்கு கையளிக்கும் நிகழ்வுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அநுராதபுரம் நோக்கி இன்று மதியம் விஜயம் செய்யவுள்ளனர்.

இரண்டு வருடங்கள் பூர்த்தி

Social Share

Leave a Reply