பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவு திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நேற்று (17/11) அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் தலைவர் கூட்டம் இடம்பெற்றது.
பிவித்துரு ஹெல உருமய கட்சி தலைவர் அமைச்சர் உதய கம்மன்பிலவின் வீட்டில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.
அதில் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீதான மனுவினை விசாரணை செய்வதற்கு விசேட சட்டத்தரணி ஒருவரை முன்னிலைப்படுத்துவதற்கு கலந்துரையாடப்பட்டதுடன், அதன் பின்னரான நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
இதேவேளை வரவு – செலவு திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று (18/11) ஏற்பாடு செய்திருந்த மத்தியக்குழு கூட்டம் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.