தம்புள்ளை – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வீதியின் அருகே நின்று கொண்டிருந்த போது வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிளொன்று அவர்கள் மீது மோதியுள்ளது.
சம்பவத்தில் பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்த 9 மாத குழந்தை தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் காயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.