விளக்கமறியலில் உள்ள முன்னாள் சுகாதார அமைச்சருக்கு வீட்டிலிருந்து உணவு..!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு வீட்டிலிருந்து உணவு எடுத்துச்செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியர்களின் பரிந்துரைக்கமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக அமைச்சர் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்ததாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி டீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்கு கோரிக்கை விடுக்கவில்லை என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இமியூனோகுளோபியூலின் மருந்து கொடுக்கல் – வாங்கல் தொடர்பில், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடந்த வெள்ளிக்கிழமை விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply