19 வயது உலகக்கிண்ண இறுதியில் இந்தியா

19 வயது உலகக்கிண்ண இறுதியில் இந்தியா

19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா அணி தெரிவாகியுள்ளது. 15 ஆவது தொடரில் எட்டாவது தடவையாக இறுதிப் போட்டிக்கு நடப்பு சம்பியனான இந்தியா அணி தெரிவாகியுள்ளது.

நேற்று(06.02) தென்னாபிரிக்காவில் நடைபெற்ற தென்னாபிரிக்கா அணியுடனான இறுக்கமான போட்டியில் 2 விக்கெட்களினால் இந்தியா அணி வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 244 ஓட்டங்களை பெற்றது. இதில் ஹுஆன் டி ப்ரட்டோரியஸ் 76 ஓட்டங்களையும், ரிச்சர்ட் செலஸ்ட்வான் 64 ஓட்டங்களையும் பெற்றனர். இந்தியா அணியின் பந்துவீச்சில் ராஜ் லிம்பினி 3 விக்கெட்களையும், முஷீர் கான் 2 விக்கெட்ளையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி 48.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 248 ஓட்டங்களை பெற்றது இதில் சச்சின் டாஸ் 96 ஓட்டங்களையும், உதய் சரண் 81 ஓட்டங்களையும் பெற்றனர். தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில் க்வேனா மபாஹா, ரிஷ்டன் லூஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இன்று நடைபெறவுள்ள அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி இந்தியா அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடும்.

Social Share

Leave a Reply