முன்னாள் சுகாதர அமைச்சரும், நேற்றைய தினம் சுற்றாடல் துறை அமைச்சு பதவியை இராஜினாமா செய்தவருமான பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல பாராளுமன்றம் செல்ல மறுத்துள்ளார். மருந்து இறக்குமதி தொடர்பான சர்ச்சையில் சந்தேக நபராக கைது செய்யபப்ட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அவர் இன்றைய பாராளுமன்ற அமர்வுக்கு செல்ல அனுமதி வழங்கிய போதும் மறுத்துள்ளதாக சிறைச்சாலை பேச்ச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று(07.02) பாராளுமன்ற அமரவுகள் மீண்டும் ஆரம்பிக்கின்றன.