வாகன இறக்குமதிக்கு இப்போதைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று(06.02) தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியான சூழ்நிலை சுமூகமான நிலைக்கு வரும் வரை வாகன இறக்குமதிக்கான தளர்வு வழங்கப்படாது எனவும் நிலைமைகளை கவனமாக அவதானித்து அதன் படியே இறக்குமதி அனுமதி இலகுபடுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதர வளர்ச்சி தொடர்பிலான சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடுகளின் படி முன்மொழியப்பட்ட அந்நியசெலவாணி திருத்தங்கள் தொடர்பில் படிப்படியாக மாற்றங்கள் கொண்டுவரப்பப்படுமென தெரிவித்துள்ளார்.