பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலர் உயிரிழப்பு..!

பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தின் பிஷின் மாவட்டத்தில் உள்ள சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற முதலாவது குண்டு வெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர்.

சுமார் ஒரு மணித்தியாலங்களுக்குப் பின்னர்; கில்லா சயிஃப் உல்லாஹ் மாவட்டத்தில் இடம்பெற்ற இரண்டாவது குண்டு வெடிப்பில் 8 பேர் உயரிழந்துள்ளனர்.

வெடிப்புச் சம்பவங்களில் காயமடைந்த 42க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானில் நாளை தினம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply