இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளை விடுவிக்க கோரி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மீனவ பிரச்சினைக்கு உடனடியாக நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 28 நாட்களில் மாத்திரம் 88 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 12 கைப்பற்றப்பட்டன.
இதேவேளை, இலங்கையில் தற்போது சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 77 மீனவர்களையும் 151 படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான அனைத்து தூதரக முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிம் தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் கோரியுள்ளார்.