பாகிஸ்தானில் அடுத்து ஆட்சியமைப்பது யார்?

பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, எந்தக் கட்சியாலும் தெளிவான ஆட்சியை அமைக்க முடியவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 169 ஆசனங்களைப் பெறுவதற்கு இதுவரை எந்தவொரு அரசியல் கட்சிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால், ஆட்சி அமைக்க கூட்டணி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தாரிக் இ இன்சாப் கட்சியுடன் தொடர்புடைய சுயேட்சை வேட்பாளர்கள் 98 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் இதுவரை 69 இடங்களிலும், பாகிஸ்தான் ஜனதா கட்சி 51 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

பாகிஸ்தானின் அரசியல் நிலவரம் நிலைத்தன்மையை இழந்து இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply