ஜூலி சங் மற்றும் சபாநாயகர் இடையே சந்திப்பு..!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையில் சந்திபொன்று இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரொன்று ஆரம்பிக்கப்படும் போது மேற்கொள்ளப்படும் நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பாக அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இதன்போது கேட்டறிந்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையில் ஜனநாயகம், மனித உரிமைகள், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் தொடர்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply