நிர்ணய விலையில் நெல் கொள்வனவு செய்யாத வர்த்தகர்களை கறுப்பு பட்டியலில் இணைக்கத் தீர்மானம்..!

நிர்ணய விலையில் நெல் கொள்வனவு செய்யாத வர்த்தகர்களை கறுப்பு பட்டியலில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

பெரும்போகத்தில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் சேகரிப்பாளர்கள் மற்றும் நெல் களஞ்சியசாலை உரிமையாளர்கள் நெல் கொள்வனவை ஆரம்பித்துள்ளனர்.

அதற்காக பல அரச மற்றும் வணிக வங்கிகள் மூலம் வர்த்தகர்களுக்கு மானிய வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகளை கவனத்திற் கொண்டு நிர்ணய விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வர்த்தகர்கள் கடன் வசதிகளையும் பெற்றுக்கொண்டு, விவசாயிகளிடமிருந்து நிர்ணய விலையில் நெல் கொள்வனவு செய்யாவிட்டால், அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply