நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்!

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் உத்தேச திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் (12.02) அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சட்டத்தின் பல பிரிவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் உட்பட பல தரப்புகளிடம் இருந்தும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, திருத்தப்பட்ட சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர், எதிர்வரும் பாராளுமன்ற நாட்களில் முதல் வாசிப்பு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கடும் விமர்சனங்கள் எழுந்ததுடன், சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட விதம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தனர்.

Social Share

Leave a Reply