நாட்டில் நச்சு வகையான மருந்துகளுக்கு நிலவு தட்டுப்பாட்டினால் போதை மாத்திரைகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மை காலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 363,438 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.