முட்டையின் விலையை இன்று(12) முதல் மீண்டும் அதிகரிப்பதற்கு அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை பகிர்ந்தளிப்பதற்கான செலவுகள் உட்பட, முட்டை உற்பத்தியுடன் தொடர்புடைய ஏனைய செலவுகள் அதிகரித்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் புத்திக வீரசேன தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்திற்கு அமைவாக, முட்டை ஒன்றின் மொத்த விலை 58 ரூபாவாகவும் சில்லறை விலை 63 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.