சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
இதன்படி, நாளை(13) காலை 6.30 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற தீர்மானமிக்க கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்படாமையின் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதார சேவையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு DAT கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் தொடர்ந்தும் சிக்கல் நிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.