கற்பிட்டி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் மூத்த கிராம சேவகர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பெண் கிராம சேவகரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமையவே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய வாக்குமூலத்தில், தனது பணிக்கு வழங்கப்பட்ட Tab கணினியை மீளப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், வீட்டில் தனியாக இருந்த போது வருகை தந்த சந்தேக நபர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அலுவலகத்தில் பணியாற்றும் போது குறித்த சந்தேக நபர் தன் கையை பிடித்ததாகவும், இதனால் மன உளைச்சலுக்கு உள்ளானதால் தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.