சுகாதார தொழிற்சங்கங்கள் தொடர் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் னுயுவு கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தாதியர் சேவையின் பல கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமையால் கொழும்பில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மெதிவத்த தெரிவித்துள்ளார்.