அமெரிக்காவில் பனிப்புயல் – ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

வடகிழக்கு அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் பனிபுயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்காரணமாக 1,220 இற்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் நிவ்யோர்க்கில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் வாகனம் செலுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அத்தியாவசிய சேவைகளுக்கு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply