‘பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்’ – அமைச்சர் பந்துல

எதிர்வரும் நாட்களில் சந்தையில் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வர்த்தக அமைச்சில் நேற்று (17/11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சந்தைக்கான பொருட்களை உற்பத்தி செய்யும் சர்வதேச நாடுகளில் பரவியுள்ள தொற்றுநோய் நிலைமை காரணமாக எதிர்வரும் மாதத்தில் கடுமையான கொவிட் அலை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், தொற்று பரவலின் காரணமாக, உலக நாடுகளில் உற்பத்தி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆகையால் இத்தகைய சூழ்நிலைகளால் இலங்கை போன்ற நாடுகள் பாதிக்கப்படுவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை சந்தையில் தற்பொழுது கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளது. ஒருகிலோகிராம் கோழி இறைச்சி 830 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதினால் நுகர்வோர் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

'பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்' - அமைச்சர் பந்துல

Social Share

Leave a Reply