ரயிலில் வான் மோதி தந்தை மகள் பலி!

யாழ்ப்பாணம் இணுவில் பிரதேசத்தில் பிரதான வீதியொன்றில் புகையிரத கடவை ஊடாக பயணித்த வான் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் தந்தையும் 6 மாத குழந்தையும் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இணுவில் புகையிரத கடவையில் அனுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த அதிவேக ரயிலுடன் குறித்த வேன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் பின்னர் தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த தாய் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Social Share

Leave a Reply