”எரிபொருள் விநியோகத்தில் எந்தவித தட்டுப்பாடும் ஏற்டவில்லை, அவ்வாறு விநியோகத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பேன்” என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்று (17/11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதேவேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் பொய்யான சில தகவல்களை பரப்பி வருவதாகவும், இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தினார்.
நாட்டில் அந்நிய செலாவணியை சேமிக்கும் முகமாகவே சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை 50 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
