பெண்கள் அறுவர் உட்பட ஏழு பேரை தெஹிவளை பொலிஸார் நேற்று (17/11) கைது செய்துள்ளனர்.
மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபசார விடுதியொன்றை நடாத்திச் சென்ற குற்றச்சாட்டுக்காகவே குறித்த 7 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் உட்பட அதன் முகாமையாளர் 20 தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவித்த பொலிஸார் அவர்கள் யட்டியாந்தோட்டை, பொரலந்த, மொரட்டுவ, ரத்மலானை மற்றும் பொல்கஸ்ஓவிட்ட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் மேலும் தெரிவித்தனர்.
