நாட்டில் உள்ள மொத்த பாடசாலை மாணவர்களில் சுமார் 129,000 சிறுவர்கள் பாடசாலை படிப்பை இடை நிறுத்தியுள்ளர்கள் என அறிக்கைகள் தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எடைக்குறைவான குழந்தைகளின் வீதம் மேலும் அதிகரித்துள்ளதாகவும், இது 2022 ஆம் ஆண்டில் 19.5 வீதமாகவும், 2023 ஆம் ஆண்டில் 21 வீதமாகவும் காணப்படுவதாக சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள சுகாதார மற்றும் போஷாக்கு பணியகம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா, அம்பாறை, யாழ்ப்பாணம், கேகாலை, கிளிநொச்சி, கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் வயதுக்கேற்ற எடை இல்லாத குழந்தைகளின் சதவீதம் அதிகமாக இருப்பதாகவும், அதில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக 32.4 சதவீதமாக இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.