எதிர்வரும் தேர்தலில் தற்போதுள்ள அரசாங்கம் நிச்சயமாக மாறும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் பல விதத்திலும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் தற்போதைய அரசாங்கம் மக்களின் அதிருப்தியை எதிர்நோக்கி நகர்வதாக வர சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது பொதுஜன பெரமுனவுக்கு விசுவாசமானவர்கள் 9 வீதமாகவே உள்ளதாகவும், ஆனால் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் 51 வீத அதிகாரம் இருப்பது நியாயமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் தேர்தலில் தற்போதைய அரசாங்கம் நிச்சயமாக தோல்வியை எதிர்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.