இரு திருநங்கைகளுக்கு ஆயுள் தண்டனை – தமிழக நீதிமன்றம் அதிரடி!

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக இரு திருநங்கைகளுக்கு தமிழகம், சேலம் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சேலம் மாவட்டம் காக்காபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுவனை பிரியாணி வாங்கித் தருவதாக ஏமாற்றி சுமார் நான்கு மணி நேரம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சந்தேக நபர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அப்பகுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருநங்கைகளுக்கு பாலியல் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் தடைவை என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Social Share

Leave a Reply