பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் சுட்டுக் கொலை!

எல்பிட்டிய, திவிதுருகம பகுதியில் இன்று (26.02) பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருந்துகஹ ஹதெக்ம அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்குப் பின்னால் உள்ள திவிதுருகமவில் உள்ள அவரது இல்லத்திலேயே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கரந்தெனிய பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் கடமையாற்றும் தீபால் ரொஷான் குமார என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply