ரஷ்ய-உக்ரேனியப் போர் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும், அந்த இரண்டு ஆண்டுகளில் ரஷ்ய ராணுவத் தாக்குதல்களால் 31,000 உக்ரேனிய ராணுவ வீரர்களும் 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கொல்லப்பட்டதாகவும் உக்ரைன் ஜனாதிபதி விளடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் யுத்தம் தொடர்பில் ரஷ்யா விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்றால், ரஷ்யப் படைகளைத் தோற்கடிக்கும் வலிமை தன்னிடம் இருப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தியுள்ளார்.