சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுடன் கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது நேற்று (17/11) வந்தடைந்துள்ளது. அதில் 40,000 மெற்றிக் டொன் டீசல் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிக்கப்படுகிறது.
இதேவேளை இலங்கைக்கு மேலும் 36,000 மெற்றிக் டொன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு எண்ணெய் தாங்கி கப்பல் இன்று (18/11) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையம் தெரிவித்துள்ளது.
மேலும் 40,000 மெற்றிக் டொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நாளை (19/11) நாட்டிற்கு வரவுள்ளதாக அறியமுடிகிறது.
