கனடாவில் படுகொலை – குழந்தைகள் உட்பட 6 இலங்கையர்கள் பலி

கனடாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டாவா தலைநகரில் அவர்களது வீட்டில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாய் (35) , 4 வயது சிறுமி, 2 வயது மற்றும் 2 மாத குழந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்போது பலத்த காயங்களுக்கு உள்ளான தந்தை(40) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களது வீட்டில் சிறிது காலம் வசித்து வந்த 19 வயதுடைய மாணவர் ஒருவரே இந்தக் கொலையைச் செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொலைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரவித்துள்ளார்.

Social Share

Leave a Reply