அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் ஐக்கிய இளைஞர் சக்தியில் புதிய அங்கத்தவர்கள் இணைதலும் எதிர்கால முன்னெடுப்புகள் பற்றிய கலந்துரையாடலும் நேற்று (18/11) இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலானது, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய இளைஞர் சக்தியின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளருமான முஹமட் சர்பான் தலைமையில் அவருடைய இல்லத்தில் இடம்பெற்றதுடன், பிரதம அதிதியாக ஐக்கிய இளைஞர் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், அதிதியாக அம்பாறை மாவட்ட செயற்குழு முக்கியஸ்தரும், பொத்துவில் பிரதேச அமைப்பாளருமான ஆஷிக் சுபைர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதேச இளைஞர்களின் எதிர்காலச் செயற்றிட்டங்கள்
குறித்து கலந்துரையாடப்பட்ட நிலையில், நிகழ்வில் கலந்து கொண்ட சகலரும் அங்கத்தவர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
அத்துடன் எதிர்காலத்தில் தாங்கள் ஐக்கிய இளைஞர் சக்தியோடு கைகோர்த்துச் செயற்படத் தயாராகவிருப்பதாகவும் இளைஞர்கள் இதன்போது உறுதியளித்திருந்தனர்.
