கரையோர ரயில் மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதம்

அறிவிப்பகரையோர ரயில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வெள்ளவத்தை ரயில் நிலையம் வரையான பகுதியில் ஒரு ரயில் பாதையின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, இன்று முதல் நாளை மறுதினம் வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொம்பனி வீதி மற்றும் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்றின் பராமரிப்பு பணிகள் மற்றும் நீர் வழங்கல் சபையின் குழாய் பதிக்கும் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கரையோரப் பாதையில் ரயில் தாமதம் ஏற்படக் கூடும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply