யுக்திய சுற்றிவளைப்பில் 779 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 620 சந்தேக நபர்களும், பல்வேறுபட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட 159 சந்தேகநபர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கைது நடவடிக்கையின்போது ஹெரோயின் ஐஸ் கஞ்சா மற்றும் மாவா மாத்திரைகள் உட்பட கணிசமான அளவு சட்டவிரோத போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 18 சந்தேகநபர்கள் பொலிசாரின் தேடுதல் பட்டியலில் இருப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.