இன்று (09.03) பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது 20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார மூன்று விக்கெட்டுகளை பெற்று ஹட்ரிக் சாதனை படைத்துள்ளார்.
அவர் தனது முதல் இன்னிங்சிலேயே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பங்களாதேஷ் அணியின் தலைவர் நஜ்முல் ஹொசைன், தவ்ஹித் ரிதோய் மற்றும் மஹ்முதுல்லா ஆகியோரின் விக்கட்டுகளே இவ்வாறு பறிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டி20 போட்டி வரலாற்றில் இலங்கை சார்பில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது வீரர் என்ற பெருமையை நுவான் துஷார பெற்றுள்ளார்.