அல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலாவ வீதி, நாணயக்கார மாவத்தை பகுதியில் உள்ள தேயிலை தோட்டமொன்றில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கரந்தெனிய, மந்தகந்த, தல்கஹாவத்தை பகுதியைச் சேர்ந்த ஹன்சிகா நதிஷானி என்ற மாணவியின் சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (08.03) கரந்தெனிய தல்கஹவத்த, கங்கபாற பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் வந்த குழுவொன்று இவரை பலவந்தமாக அழைத்துச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சிறுமி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.