இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியில் 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
சைல்கொட்டில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது. இதில் குசல் மென்டிஸ் 86(55) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் தஸ்கின் அஹமட், ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், முஸ்தபிசுர் ரஹ்மான், ஷொரிபுல் இஸ்லாம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அண 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றது. இதில் ரிஷாத் ஹொசைன் 53(30) ஓட்டங்களையும், தஸ்கின் அஹமட் 31(21) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நுவான் துஷார 5 விக்கெட்களையும், வனிந்து ஹசரங்க 2 விக்கெட்களையும், தனஞ்சய டி சில்வா, மஹீஸ் தீக்ஷண, தசுன் ஷானக ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
இது நுவான் துஷாரவின் முதலாவது ஹட்ட்ரிக்கும், இலங்கை அணிக்காக பெறப்பட்ட 6 ஆவது ஹட்ட்ரிக்கும், இலங்கை அணிக்காக ஹட்ட்ரிக்கை கைப்பற்றிய 5 ஆவது வீரராகவும் நுவான் துஷார தனது பெயரை பதிவு செய்துள்ளார்.