மஹியங்கனை, தம்பனை, குகுலபொல பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் இன்று முற்பகல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது விகாரையிலிருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விகாராதிபதியின் அறையை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.