சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டு இருப்பினும் அங்கு ஊழியர்கள் நாளாந்தம் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அஷோக ரன்வல வெளியிட்டுள்ள அறிக்கையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளார்.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இயங்காவிட்டாலும் பணிப்புரியும் ஊழியர்களுக்காக மாதாந்தம் சுமார் 100 மில்லியன் வரை செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.