தலைமன்னாரில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
படகில் பயணித்துக்கொண்டிருந்த போது, உடல் நலக்குறைவால் குறித்த மீனவர் கடலில் வீழ்ந்துள்ளார்.
இதனையடுத்து, ஏனைய மீனவர்களின் உதவியுடன் குறித்த மீனவர் கரைக்கு கொண்டுவரப்பட்டு, தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
56 வயதான மீனவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று பிரேத பரிசோதனைகள் இடம்பெற்றன.