மட்டக்களப்பில் இறால் பண்ணையாளர்களுக்கு காணி ஒதுக்கீடு

மட்டக்களப்பில் இறால் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு சிறிய அளவிலான இறால் பண்ணை திட்டங்களுக்கான காணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒதுக்கீடு செய்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் மீன்பிடி மற்றும் இறால் வளர்ப்பு ஆகிய தொழில்களை அபிவிருத்தி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய,மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் பட்டிப்பளையில் இடம்பெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுடன் இணைந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கான அனுமதி பத்திரங்கள் கிழக்கு மாகாண ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டன.

Social Share

Leave a Reply