‘அரகலய’ தொடர்பில் வெளிவர இருக்கும் உண்மைகள்..!

மக்கள் போராட்டமான அரகலயவின் போது அரசியலமைப்பிற்கு முரணாக சில அரசியல்வாதிகள் சபாநாயகரான தன்னை, ஜனாதிபதியாக பொறுப்பேற்குமாறு அழுத்தங்களை வழங்கியமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சிறப்புரை ஆற்றவுள்ளதாக சபாநாயகரின் செயலாளர் ஆங்கில ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் அவர் சிறப்புரை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், சபாநாயகர் அண்மை காலத்தில் இடம்பெற்ற குறிப்பிட்ட சில விடயங்கள் தொடர்பில் உண்மைகளை வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நிலையியற் கட்டளைகளுக்கு அமைய நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு சபாநாயகரால் கலந்து கொள்ள இயலாது என்பதனால், பிரேரணை மீதான வாக்கெடுப்பு  இடம்பெற்றதன் பின்னர், சபாநாயகர் இவ்வாறு உரையாற்றவுள்ளார்.

Social Share

Leave a Reply