அரசியலமைப்பிற்கு அமைய முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பசில் ராஜபக்ஷ ஊடகங்களுக்கு அறிவித்துள்ள பிண்ணயில், ஐக்கிய தேசிய கட்சி மறுப்பட்ட நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளது.
அரசியலமைப்பிற்கு அமைய, இவ்வருடம் செப்டம்பர் 16ம் மற்றும் அக்டோபர் 16ம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற வேண்டும் எனவும் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர், அடுத்த வருடமே பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடாகும்.