டெஸ்ட் அணியில் மீண்டும் வனிந்து ஹசரங்க..! 

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்க, பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட குழாமில் பெயரிடப்பட்டுள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வனிந்து ஹசரங்க டெஸ்டில் இருந்து ஓய்வுப் பெறுவாதாக அறிவித்தார். இலங்கை இருபதுக்கு இருபது அணிக்கான தலைவராக பெயரிடப்பட்டுள்ள நிலையில் அவர் மீண்டும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடவுள்ள ஹசரங்க, பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதால் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஆரம்ப போட்டிகளில் பங்கேற்க இயலாது. 

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றிருந்த குழாமில் இம்முறை இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹசரங்கவுடன் சுழற்பந்து வீச்சாளரான நிஷான் பீரிசும் டெஸ்ட் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக வேகப்பந்து வீச்சாளரான அசித பெர்னாண்டோ மற்றும் மிலன் பிரியந்த் ரத்நாயக்க டெஸ்ட் குழாமிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இலங்கை டெஸ்ட் குழாம்: தனஞ்சய டி சில்வா(அணித் தலைவர்), குசல் மெண்டிஸ்(உப தலைவர்), திமுத் கருணாரத்னே, நிஷான் மதுஷ்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், லஹிரு உதாரா, வனிந்து ஹசரங்க, பிரபாத் ஜெயசூரிய, நிஷான் ராஜித, நிஷான் ராஜித, எஃப். , லஹிரு குமார, சாமிக்க குணசேகர

இதேவேளை, 15 பேர் கொண்ட பங்களாதேஷ் டெஸ்ட் குழாமில் மீண்டும் லிட்டன் தாஸ் பெயரிடப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் நஹித் ராணாவும் முதல் முறையாக பங்களாதேஷ் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 

பங்களாதேஷ் குழாம்: நஜ்முல் ஹுசைன் சாண்டோ ( அணித் தலைவர்  ), ஜாகிர் ஹசன், மஹ்மூதுல் ஹசன் ஜாய், ஷத்மான் இஸ்லாம், லிட்டன் குமர் தாஸ், மொமினுல் ஹக் ஷெராப், முஷ்பிகுர் ரஹீம், ஷஹாதத் ஹொசைன் திபு, மெஹிதி ஹசன் எஸ் மிராஸ், நயீம் ஹசன், ஷோரி இஸ்லாம், ஷோரி இஸ்லாம், தைஜுல் இஸ்லாம். அகமது, முஷ்பிக் ஹசன், நஹித் ராணா

இரு அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 22ம் திகதி பங்களாதேஷ் சிலேட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.  

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version