ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச, இலங்கையின் ஜனாதிபதி பதவியிலிருந்து தாம் வெளியேற்றப்பட்டதற்கான காரணங்களை கோடிட்டுக் காட்டும் தனது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷவின் அண்மையில் வெளியிடப்பட்ட புத்தகத்தை தான் படிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது பேசிய பசில் ராஜபக்ஷ, தனது சகோதரரிடமிருந்து புத்தகத்தின் பிரதியையோ அல்லது டிஜிட்டல் பிரதியையோ பெறவில்லை அதற்கு தாம் ஆர்வம் காட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பசில் ராஜபக்ஷ புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து தான் கோபமாக இருப்பதாக வெளிவந்த தகவல்களை மறுத்து, அவை வெறும் வதந்திகள் என தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவுடனான தனது உறவு குறித்தும், இருவருக்குமிடையிலான கருது வேறுபாடு குறித்து கலந்துரையாடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.