தொழிநுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட விமானம்

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் தொழிநுட்ப கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பெங்களூருக்கு இன்று காலை (19) பயணித்த விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்டு சுமார் 40 நிமிடங்களின் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விமானத்தில் பயணித்த பயணிகள் வேறு விமானங்கள் மூலம் உரிய இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply